9 நாளே நானே நடந்துக்குவேனு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா பேசின பையன்.. இப்ப ஊழியம் பத்தியும் தன்னோட ஞான அருள் பத்தியும் பேட்டி கொடுத்திருக்கான்.
சமூகம் இவனை ரொம்ப சீரியசா எடுத்துக்கல... ஊழியம்ங்கிற பேர்ல இப்ப நிறைய காமெடி எல்லாம் நடக்குது. நகையை போடு. டான்ஸை போடுனு அது ஒரு பக்கம் போகுது. அதுல இதுவும் ஒன்னுனு கடந்து போகுது.
ஆனா எனக்கென்னமோ இந்த பையனை பார்க்கும் போது பெரிய பெரிய மத உபன்யாசகர் மாதிரி தான் தெரிஞ்சது. இங்க எல்லா மத்தையும் சேர்த்து தான் சொல்றேன். மதப் பெரியவர்கள் பேசுற எல்லார் பேச்சிலயும் இருக்கும் அதே நாடகதன்மை தான் இவனோட பேச்சிலயும் இருந்துச்சு.
ஒருவேளை கடவுள் இருந்தா... அவருக்கு ஒரு அபிசேஷ மொழியோ, இல்ல அவரோட பெருமைகளை பேச ஊழியங்களோ, அவருக்கும் மனிதர்களுகும் இடையில் மீடியட்டரோ வச்சிருக்க மாட்டார்.
இதெல்லாம் செஞ்சா பாவம் இவ்ளோ குறையும், அதெல்லாம் கொடுத்த ஸ்பெஷலா சொர்க்கம் போய்டலாம் கண்டிப்பா கடவுள் சொல்லமாட்டார்.
இவனுக கட்டுன கோவில் ( எல்லா மதமும் தான் ) இவனுக உருவாக்குன மொழி, இவனுக உருவாக்குன சடங்கு, இவனுக உருவாக்குன வழிபாட்டு முறைனு ஒரு நாடகமே நடத்திட்டு இருப்பானுங்க.
உண்மையில கடவுள்னு ஒருத்தர் இருந்தா.. இன்னைக்கு உலகத்தில இருக்கிற எந்த மதத்திலும் சடங்கிலும் இருக்கமாட்டாரு. அத எல்லாருக்கும் தெரியும் புரியும். ஆனாலும், ஏன் செய்றாங்கன்னா..... அது ஒரு கோஷ்டி மனப்பான்மை. அல்லது போலியாக தன்னை தானே ஏமாற்றி ஆறுதல் சொல்லிகொள்ளும் தன்மை.
கடவுள்னு ஒருத்தன் / ஒருத்தி இருந்தா அது நீங்க கடைசியா அன்பை உணர்ந்த மனுசனா / மனுசியா இருப்பாரு. ஒருவேளை வேறுயாருக்கோ நீங்க அப்படி அன்பை உணர வச்சிருந்தா... அது நீங்களாவும் இருக்கலாம்...
கருத்துகள்
கருத்துரையிடுக